யோகி பாபுவை விரட்டி புடிக்கும் பிரபல நடிகர்

மண்டேலா, தர்மபிரபு போன்று கதாநாயகன் வேடத்தில் சில படங்கள் வந்தபோதும் யோகி பாபு தனக்கென்ற அடையாளமான காமெடியன் வேடத்தை எப்போதும் விட்டுவிடுவதல்ல. ஏழை தயாரிப்பாளர்களின் வரப்பிரசதமான யோகிபாபு தொடுவதெல்லாம் ஹிட்டாகிறது.

அவரத தலைமுடியும் கேளிப்பேச்சும் என இளைஞர்கள் மத்தியில் இளம்பெண்கள் மத்தியில் எப்போதும் வரவேற்புடைய எதார்த்த நடிகர்.

முன்னணி ஹீரோக்களும் படத்தில் பாபு இல்லையா இருக்காரா என்பதனை அறிந்தே பல்வேறு படங்களுக்கு ஒப்புக்கொள்வதாய் கோடம்பாக்கம் பகுதி வட்டாரங்களில் பேச்சு.

தமிழ் சினிமா உலகின் தற்போதய மாஸ் நடிகர்களின் முன்னணி நடிகர் நம் எல்லோருக்கும் பிடித்த ‘தல’ தான் வலிமை திரைப்படத்திலும் அவர் இணைகிறார். ஏற்கனவே ‘தல’ உடன் வீரம், வேதாளம் ,விசுவாஸம் என சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்து வெற்றியின் உச்சம் தொட்ட படங்களை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் வெளிவர தயாராகும் ‘வலிமை’ திரைப்படத்தில் தான் நடிக்கிறார் யோகிபாபு.

யோகிபாபுவுக்கான மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்திருக்கு பழமை மறவாத யோகி நான்காவது முறையாக நடிகர் விஷாலுடன் கூட்டணி அமைக்கிறார். நடிகர் விஷாலும், யோகி பாபுவும் ஏற்கனவே பட்டத்து யானை, அயோக்யா, ஆக்‌ஷன் போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.