உலக சாதனையாளருக்கு நேர்ந்த சோதனைக் காலம்.!

சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரரும், உலக தரவரிசையில் 4-வது இடம் வகிப்பவருமான ரோஜர் பெடரருக்கு, கடந்த பிப்ரவரி மாதம் வலது கால்முட்டி காயத்துக்கு சிறிய அளவில், ஆபரேஷன் நடந்தது.

இந்த நிலையில், மறுபடியும் அதே முட்டியில் பிரச்சினை ஏற்பட்டதால், 2-வது முறையாக, ஓரிரு வாரங்களுக்கு முன்பு, ஆபரேஷன் செய்யப்பட்டது.

காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து, புத்துணர்ச்சியுடன் களம் திரும்ப முடிவு எடுத்துள்ள பெடரர்,’ இந்த சீசனில் எஞ்சிய போட்டிகளில் விளையாடப்போவதில்லை’ என்று அறிவித்துள்ளார்.

2021-ம் ஆண்டு சீசனை எதிர்நோக்கி இருப்பதாக அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

20 கிராண்ட்ஸ்லாம் வென்ற சாதனையாளரான 38 வயதான பெடரர், அமெரிக்க ஓபன் மற்றும் பிரெஞ்ச் ஓபன் உள்ளிட்ட போட்டிகளை தவற விடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.