பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி, அட்டவணை வெளியீடு.!

உலக நாடுகளை, கொரோனா வைரஸ் அச்சத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் வேளையில், அரசுகளின் துரித நடவடிக்கைகளால், சில நடுகளில் வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகின்றன. இயல்பு நிலை முழுதாக திருப்பும் என நம்புவோம்.!

இந்நிலையில், 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் புதிய அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது.

கொரோனா எதிரொலியாக, அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்ட 17 வயதுக்குப்பட்ட பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் புதிய அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.

 

இதன்படி, 16 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி, அடுத்த ஆண்டு பிப்ரவரி 17-ந்தேதி முதல், மார்ச் 7-ந்தேதி வரை நடக்கிறது.

இறுதிப்போட்டி நவிமும்பையிலும், இந்திய அணிக்குரிய லீக் ஆட்டங்கள் கவுகாத்தியிலும் அரங்கேறுகிறது.