பெண்கள் இரட்டையர்: சானியா ஜோடி சந்திப்பது யார்?

டோக்கியோ ஒலிம்பிக்: இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆடும் இந்திய வீரர் சுமித்

நாகல் முதல் சுற்றில் உஸ்பெகிஸ்தான் வீரர் டெனிஸ் இஸ்தோமினை சந்திக்கிறார்.
முதல் தடையை சுமித் நாகல் வெற்றிகரமாக கடந்தால் 2-வது சுற்றில் உலகின் 2-ம் நிலை வீரர் டேனில் மெட்விடேவுடன் (ரஷியா) மோத வேண்டி வரலாம். ‘கோல்டன்ஸ்லாம்’ கனவுடன் வந்துள்ள ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) தனது முதல் சுற்றில் பொலிவியா வீரர் ஹூகோ டெலியனுடன் மோதுகிறார்.

பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் சானியா மிர்சா-அங்கிதா ரெய்னா ஜோடி தங்களது முதல் சுற்றில் உக்ரைன் இரட்டை சகோதரிகளான நாடியா கிச்னோக் -லுட்மைலா கிச்னோக் இணையை எதிர்கொள்கிறார்கள்.