’பெண்கள் கிரிக்கெட்’ சோபி : லாக் டவுன்ல எடுத்த பயிற்சிக்கு பலன் கிடைச்சிடுச்சு..

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 3-வது பெண்கள் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. நடப்பு சாம்பியன் சூப்பர் நோவாஸ், வெலோசிட்டி, டிரைல்பிளாசர்ஸ் ஆகிய 3 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த போட்டியில், ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

நேற்றைய போட்டியில், மிதாலி ராஜ் தலைமையிலான வெலோசிட்டி அணியை ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான டிரைல்பிளாசர்ஸ் அணி 47 ரன்னில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில், அதிரடியாய் ஆடி வெற்றிக்குக் காரணமாக அமைந்தவர் இளம் வீராங்கனை சோபி. அவர் தனது சுழற் பந்துவீச்சின் மூலம் 4 விக்கெட்களை சாய்த்தார்.

தனது சிறப்பான பந்துவீச்சு குறித்துப் பேசிய சோபி,

லாக் டவுனில் விடாமல் பயிற்சி செய்தது, இப்போது பலன் அளித்துள்ளது என்றார்.

மேலும், சேஸிங் துவங்கும் முன்பே அவர் 8 ஓவர்களில் இந்த இலக்கை நாங்கள் எட்டி விடுவோம் என்றார்.

யார் இந்த சோபியா.? இங்கிலாந்து அணியின் இளம் சுழற் பந்துவீச்சாளரான சோபி எக்கிளேஸ்டோன் டி20 போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் பட்டியலில், முதல் இடத்தில் இருக்கிறார்.

அவரைச் சமாளிக்க முடியாமல்தான், மிதாலிராஜ் தலைமையிலான வெலாசிட்டி அணி படுதோல்வி அடைந்தது.