பெண்கள் சேலஞ்ச் கிரிக்கெட் இன்று தொடக்கம்

பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் முன்னோட்டமாக கருதப்படும் பெண்களுக்கான சேலஞ்ச் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று முதல் 28-ந்தேதி வரை புனேயில் நடக்கிறது. இதில் ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான டிரையல்பிளாசர்ஸ், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர்நோவாஸ், தீப்தி ஷர்மா தலைமையிலான வெலோசிட்டி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இன்றிரவு 7.30 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் டிரையல்பிளாசர்ஸ் அணி, சூப்பர் நோவாசை எதிர்கொள்கிறது. இதில் இந்தியர்கள் மட்டுமின்றி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகளும் ஆடுகிறார்கள்.