அஸ்வின் சேர்க்கப்படுவாரா? – கோலி பதில்

‘டெஸ்ட் மற்றும் ஐ.பி.எல். போட்டிகளில் சிறப்பாக ஆடி வரும் அஸ்வின் வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டுக்கு (சர்வதேச ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி) திரும்ப வாய்ப்பிருக்கிறதா என்று கேட்கிறீர்கள். தற்போது சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் உண்மையிலேயே நன்றாக விளையாடி வருகிறார். ஒரு இடத்துக்கு ஒரே மாதிரியாக பந்துவீசும் இருவரை சேர்க்க முடியாது. வாஷிங்டன் சுந்தர் ஒரு சீசன் முழுவதும் மோசமாக பந்து வீசினால் அஸ்வினை சேர்ப்பது குறித்து பரிசீலிக்கலாம். அதுவரை அவர் திரும்புவதற்கு வாய்ப்பில்லை.

சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் போன்ற வீரர்கள் பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்களாக இருக்க முடியும். உலக கோப்பை போட்டிக்கு முன்பாக இது போன்ற வீரர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பார்க்க விரும்புகிறோம். இவர்கள் மூலம் இந்தியாவின் பேட்டிங் வரிசை மேலும் வலுவடைந்திருக்கிறது’ என்றார்.