ஆறாப்பு படிக்கிறப்பவே, ஜெயம் ரவிகூட நடிச்சிருக்கேன் : சாய் பல்லவி

மருத்துவப் படிப்பு பயின்று, மலையாளத்தில் ‘பிரேமம்’ என்ற முதல் படத்திலேயே மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து பரபரப்பாக பேசப்பட்டார் சாய் பல்லவி.

இதனைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கில் படங்கள் குவிந்தன. விஜய் இயக்கிய தியா, தனுஷ் ஜோடியாக மாரி-2, சூர்யா ஜோடியாக என்.ஜி.கே படங்களிலும் நடித்தார்.

தற்போது, ’விராட பருவம்’, ’என்.சி 20’ ஆகிய 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ’விராட பருவம்’ படத்தில் பெண் நக்சலைட் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

வைரலாகும் சாய் பல்லவியின் புகைப்படம் ’பிரேமம்’ படம் மூலம்தான், சாய் பல்லவி நடிகையாக அறிமுகமானதாக கூறப்படும் நிலையில், அவர் 6-ம் வகுப்பு படிக்கும்போதே, ஜெயம் ரவியின் ‘தாம்தூம்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அந்த படத்தில் கங்கனா ரனாவத்துடன், அவர் இருக்கும் புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.