நாங்கள் எதையும் இழக்க மாட்டோம் – விராட் கோலி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை பெங்களூர் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வெற்றி குறித்து பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி, ‘இது நம்ப முடியாத வெற்றியாக இருந்தது. இந்த போட்டியால் நாங்கள் எதையும் இழக்க மாட்டோம் என்பது தெரியும். புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடுவது நல்லதாகும். இந்த சீசனில் அவர்களை (டெல்லி) நாங்கள் 2 முறையும் தோற்கடித்து உள்ளோம். டிவில்லியர்ஸ், கே.எஸ்.பரத் ஜோடி முதலில் நன்றாக விளையாடியது. பின்னர் மேக்ஸ்வெல்-கே.எஸ்.பரத் ஜோடியின் பாட்னர்ஷிப் அருமையானது. கே.எஸ்.பரத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 3வது வீரராக களம் இறங்கி சிறப்பாக விளையாட முடியும் என்பதை நாங்கள் அறிவோம். அவர் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக நன்றாக விளையாட கூடியவர். இந்த போட்டித்தொடரில் நாங்கள் அதிகமாக ரன் சேசிங் செய்யவில்லை. இதனால் 2வது பேட்டிங்கின்போது நாங்கள் சிறப்பாக விளையாடுவது முக்கியமானதாக இருந்தது. நாங்கள் பீல்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டும் என்று நான் கண்டிப்பாக நினைக்கிறேன். ஏனென்றால் பிளே-ஆப் சுற்றுக்கு வரும் போது எந்த அணியும் உங்களுக்கு 2வது வாய்ப்பை வழங்காது’ என கோலி கூறினார்.