விட்டுக் கொடுக்க மாட்டோம் – மன்ப்ரீத் சிங்

‘விட்டுக் கொடுக்க மாட்டோம் வெண்கலப்போட்டிக்கு கடுமையாக போராடுவோம்’ எனத் தெரிவித்துள்ளார், இந்திய ஹாக்கி நட்சத்திரம், மன்ப்ரீத் சிங்.

இதுகுறித்து மேலும் அவர், ‘இது துயரமான நாள். தோற்றுவிட்டோம் ஆனால் வெண்கலப் பதக்க போட்டி இன்னும் உள்ளது. அதற்குத் தயார்ப்படுத்திக் கொள்வோம். முக்கியமான மேட்சை தோற்றுவிட்டோம், பெரிய தவறுகளை இழைத்தோம். அதுவும் கோல் அருகே சர்க்கிளுக்குள் ஏகப்பட்ட தவறுகளை செய்தோம். வெண்கலப் போட்டியில் எங்கள் சிறந்த பங்களிப்பைச் செய்வோம். ஒருநாள், ஒரு மேட்ச் உள்ளது, எனவே சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். ஒருவரை ஒருவர் ஊக்குவித்து ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்போம்’ என்றார்