ஹாலிவுட் எக்ஸ்டிரேக்சன் பட ஸ்டைலில் வெளியான விஷாலின் எனிமி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.

ஆக்சன் படத்தின் தோல்விக்கு பிறகு தற்போது விஷால் நடிப்பில் சக்ரா, துப்பறிவாளன் 2 மற்றும் எனிமி போன்ற படங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஆக்ஷன் படத்தில் படு தோல்வியால் விஷால் மார்க்கெட் கொஞ்சம் ஆட்டம் கண்டுள்ளது என்று சொல்லலாம்.
இந்நிலையில் எப்படியாவது ஒரு வெற்றிப் படத்தைக் கொடுத்து விட வேண்டும் என அடுத்தடுத்து வெற்றிப் படங்கள் கொடுத்த இயக்குனர்களுடன் கைகோர்த்து வருகிறார். மேலும் துப்பறிவாளன் 2 படத்தில் மிஷ்கினுடன் ஏற்பட்ட சண்டை இவருக்கு பெரும் கெட்ட பெயரை ஏற்படுத்தியது.
அதையெல்லாம் துடைத்தெறிந்து விட்டு தற்போது ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் எனிமி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் டிக் டாக் புகழ் மிருணாளினி என்ற நடிகை விஷாலுக்கு ஜோடியாக முதல் முறையாக நடித்துள்ளார்.
ஆந்திராவில் நடைபெற்று வந்த முதல் கட்ட படப்பிடிப்புகள் சமீபத்தில் தான் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. ஆனந்த் ஷங்கர் ஏற்கனவே அரிமா நம்பி, இரு முகன், நோட்டா போன்ற படங்களை இயக்கியவர்.
இந்நிலையில் தற்போது எனிமி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. இதில் ஹாலிவுட் படம் எக்ஸ்டிரேக்சன் ஸ்டைலில் துப்பாக்கியுடன் மிரட்டியுள்ளார் விஷால். போஸ்டரை பார்க்கும்போது கண்டிப்பாக ஒரு அதிரடி விருந்து காத்திருக்கிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
விஷாலின் பர்ஸ்ட் லுக் போஸ்டரே இவ்வளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் அடுத்ததாக வில்லனாக நடிக்கும் ஆர்யாவின் போஸ்டர் எப்படி இருக்கும் என இப்போதைய ரசிகர்கள் எக்கச்சக்க எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.