விஜய் சேதுபதி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் : கடம்பூர் ராஜு!

’800’ திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிப்பது குறித்து புரிந்து செயல்பட்டால் அவரது எதிர்காலத்துக்கு நல்லது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். ‘800’ திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிப்பது குறித்து புரிந்து செயல்பட்டால் அவரது எதிர்காலத்துக்கு நல்லது. நடிப்பது தனிப்பட்ட உரிமை என்றாலும் உணர்வை புரிந்து செயல்பட்டால் விஜய்சேதுபதி எதிர்காலத்திற்கு நல்லது. மக்களின் உணர்வுகளை மதிக்கவேண்டிய இடத்தில் நடிகர் விஜய் சேதுபதி உள்ளார். அதனால் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பது பற்றி, அவர் யோசித்து பார்க்க வேண்டும்”என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘நான் சென்னை சென்றவுடன் ஓரிரு நாட்களில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகளை, தமிழக முதல்வரிடம் நேரடியாக அழைத்துச் சென்று பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து, அதில் அவர்களது கருத்துகளை தெரிவித்து அவர்களின் ஒப்புதல் பெறப்படும்.என்றார்.