முத்தையா முரளிதரனாக மாறிய நடிகர் விஜய் சேதுபதி! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் விஜய் சேதுபதியின் 800 திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முத்தையா முரளிதரன் கிரிக்கெட் போட்டிகளில் உலக சாதனை படைத்து ஜாம்பவானாக வலம் வந்தவர் ஆவார். உலக அளவிலான சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக வலம் வந்த முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் 800 என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் மோஷன் பிக்சர் ஆனது இன்று மாலை இணையத்தில் வெளியானது. அதில் நடிகர் விஜய் சேதுபதி பார்ப்பதற்கு அச்சு அசலாக இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் போலவே தோற்றமளிக்கிறார். இந்த புகைப்படமானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.