வீராங்கனை வீட்டில் சோதனை : அரசு அதிகாரி பணிநீக்கம்

மேற்கு வங்காளத்தில், ஜல்பைகுரி மாவட்டத்தில் வசித்து வருபவர் ஸ்வப்னா பர்மன்.  தடகள வீராங்கனையான ஸ்வப்னா. கடந்த 2018ம் ஆண்டு நடந்த ஆசிய போட்டிகளில் கலந்துகொண்டு தங்கம் வென்றவர்.

அர்ஜுனா விருது பெற்றவரான இவரது வீட்டில், கடந்த 13ந்தேதி வனத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில், ஸ்வப்னாவுக்கு ஆதரவாக, முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார். ’

ராஜ்பன்ஷி சமூகத்தின் சிறந்த வீரர் ஸ்வப்னா.  நான் அவரை மதிக்கிறேன். 

வீடு கட்டுவதற்கு, எப்படியோ அவர் மரக்கட்டைகளை வாங்கியுள்ளார்.

எங்களிடம் தெரிவிக்காமல் வனத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய சென்றுள்ளனர். எங்களிடம் கேட்டு இருந்தால், நாங்கள் அனுமதி அளித்திருக்கமாட்டோம்’ என கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சோதனை நடத்திய அதிகாரி சஞ்சய் தத்தாவை அரசு, பணி இடமாற்றம் செய்தது. எனினும், அரசு உத்தரவை எதிர்த்து, கிராமவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.