ஒலிம்பிக்கில் சாதிப்போம் – வந்தனா நம்பிக்கை

டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவோம் என்று இந்திய ஹாக்கி வீராங்கனை வந்தனா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வந்தனா கூறுகையில், ‘அர்ஜுனா விருதுக்கு என் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருப்பது மிக்க மகிழ்ச்சி. இது, அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட ஊக்கம் அளிக்கும். எனது சிறப்பான செயல்பாட்டிற்கு, சக வீராங்கனைகளின் ஒத்துழைப்பு முக்கியக் காரணம். இதற்காக அவர்களுக்கு நன்றி. தற்போது இந்திய பெண்கள் அணி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஒலிம்பிக் போன்ற மிகப் பெரிய தொடர்களில் சாதிப்போம் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது’ என்று கூறினார்.

மத்திய அரசின் அர்ஜுனா விருதுக்கு வந்தனா பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.