21 வருடங்களுக்கு முன் இதே நாள்! என் வாழ்வை மாற்றிய தருணம்- நடிகை திரிஷா!

பிரபல நடிகை திரிஷா 21 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் நடந்த முக்கியமான தருணம் பற்றி ட்விட் செய்துள்ளார்.

தமிழ், தெலுங்கு ,மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை திரிஷா ஆவார். இவர் கடந்த 2002ம் ஆண்டு நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்து வெளிவந்த மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஆவார். அதன்பின்பு ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினி,அஜித், விஜய், விக்ரம் போன்ற பல்வேறு நடிகர்களுடன் நடித்து மிகவும் பிரபலமானார். இவர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த 96 என்ற திரைப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

இவர் தற்போது கர்ஜனை, ராங்கி, சுகர், பொன்னியின் செல்வன் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை திரிஷா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் அதாவது செப்டம்பர் 30ஆம் தேதி மிஸ் மெட்ராஸ் பட்டத்தை வென்றதாகவும், அது என்னுடைய வாழ்வில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது என்றும் மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.