டோனி என்னை ஊக்கப்படுத்தினார்-டி.நடராஜன்

எம்எஸ் டோனியுடன் யாருக்கெல்லாம் பழக வாய்ப்பு கிடைத்ததோ, அவர்களெல்லாம் டோனியை புகழந்து கூறுவதுண்டு. ஏனென்றால் அவர்களிடம் மறைந்து கிடக்கும் திறமையை வெளிக்கொண்டு வர ஆலோசனை வழங்குவார்.

அந்த வகையில் தனக்கும் ஆலோசனை வழங்கினார் என கடந்த ஐபிஎல் தொடரில் 71 யார்க்கர் பந்துகளை வீசிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடும் இந்திய வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான டி நடராஜன் தெரிவித்துள்ளார்.

எம்எஸ் டோனி குறித்து டி நடராஜன் நினைவு கூர்ந்து கூறுகையில் ‘‘எம்எஸ் டோனி போன்ற ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, அது தனக்கு மிகப்பெரிய விஷயமாக இருக்கும். டோனி என்னிடம் பிட்னஸ் பற்றி பேசினார். என்னை ஊக்கப்படுத்தினார். நான் அனுபவத்துடன் மிகச் சிறப்பாக வருவேன் என்றார்.