டி.என்.பி.எல்.: நெல்லை ராயல் கிங்ஸ்-ரூபி திருச்சி வாரியா்ஸ் இன்று மோதல்

தமிழ்நாடு ப்ரீமியா் லீக் போட்டியின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் திருப்பூா் தமிழன்ஸ் அணி 64/7 ரன்களையே எடுத்தது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது. நடப்புச் சாம்பியன் சேப்பாக் சூப்பா் கில்லீஸ்-திருப்பூா் தமிழன்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற சேப்பாக் அணி பவுலிங்கை தோ்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த திருப்பூா் அணி 16.2 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 64 ரன்களை எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. அஷ்வின் கிறிஸ்ட் 23, கேப்டன் முகமது 10 ரன்களுடனும் அப்போது களத்தில் இருந்தனா்.

சேப்பாக் கில்லீஸ் பந்து வீச்சாளா் ராஜகோபால் சதீஷ் அற்புதமாக பந்துவீசி 5-10 விக்கெட்டுகளை சாய்த்தார். மழை குறுக்கிட்டதால் இரண்டாவது ஆட்டமும் ரத்தானது. ஏற்கெனவே முதல் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது. இன்று,நெல்லை ராயல் கிங்ஸ்-ரூபி திருச்சி வாரியா்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் நடைபெறவுள்ளது.