டீச்சரை காட்டிக் கொடுத்த மாணவன்.!

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் ஊரடங்கை கண்காணிப்பதற்காக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த வழியாக வந்த சிறுவனை பிடித்து விசாரித்துள்ளனர்.

அப்போது, தனது பெற்றோர் தன்னை கட்டாயப்படுத்தி, டியூஷனுக்கு அனுப்புவதாக சிறுவன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, போலீசார் சிறுவனை அழைத்துக்கொண்டு டியூஷன் ஆசிரியை வீட்டிற்கும் சென்று ஊரடங்கை மீறி, டியூஷன் எடுக்கக்கூடாது என்று எச்சரித்தனர்.

அப்போது குறுக்கிட்ட சிறுவன், தன்னைப் போல மேலும் மூன்று சிறுவர்கள் டியூஷனுக்கு வருவதாகவும் புகார் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, சிறுவனின் பெற்றோரையும் அழைத்து, பிள்ளைகளை டியூஷனுக்கு அனுப்ப வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தினர்.