தோல்வியடையாத ஒரே அணியான ஆர்சிபி முதல் இடத்தில்

ஐபிஎல் போட்டியின் புள்ளிகள் பட்டியலில் மூன்று வெற்றிகளைப் பெற்றுள்ள விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் 38 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை வீழ்த்தியது. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை பகலிரவாக நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூா் 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்களே எடுத்தது. பெங்களூா் வீரா் டி வில்லியா்ஸ் ஆட்டநாயகன் ஆனாா்.

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய தில்லி 18.2 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் அடித்து வென்றது. தில்லி வீரா் ஷிகா் தவன் ஆட்டநாயகன் ஆனாா்.

நேற்று வெற்றி பெற்ற பெங்களூர். தில்லி ஆகிய இரு அணிகளும் புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளன. இதுவரை தோல்வியடையாத ஒரே அணியான பெங்களூர் 6 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் இதுவரை ஒரு வெற்றியும் பெறாத ஹைதராபாத் அணி, கடைசி இடத்திலும் உள்ளன.