ரசிகர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்

இரண்டவாது டெஸ்ட் வரும் பிப். 13-&17 ல் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதைக்காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக கிரிக்கெட் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “காய்ச்சல், இருமல் உள்ளிட்ட கொரோனா அறிகுறியுடன் வரும் ரசிகர்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கொரோனா, பாதுகாப்பு விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’என தெரிவிக்கப்பட்டுள்ளது.