இந்திய அணியினர் சகிப்புத் தன்மை கொண்டவர்கள்- கங்குலி

கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருப்பது கடினம், ஆனால் இந்திய வீரர்கள் சகிப்புத் தன்மை கொண்டவர்கள் என்பதால் சமாளித்து விடுவர், என கங்குலி தெரிவித்தார்

இந்தியாவில் 2020ல் கொரோனா பரவல் ஏற்பட்டதும் பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் ரத்தாகின. தள்ளிவைக்கப்பட்ட 13 வது சீசன் ஐ.பி.எல்., எமிரேட்சிற்கு மாற்றப்பட்டது. இதற்காக கடந்த செப்டம்பர் மாதம் இந்திய வீரர்கள் எமிரேட்ஸ் சென்றனர். இதன் பின் ‘ஒட்டல் & -மைதானம் -& ஓட்டல்’ என வீரர்கள் வேறு எங்கும் செல்லாமல், கொரோனா பாதுகாப்பு வளையத்தில் முடங்கினர்.

பின், அங்கிருந்து ஆஸ்திரேலியாவில் 72நாள் பயணம், மீண்டும் இந்திய மண்ணில் இங்கிலாந்து தொடர் என தொடர்ந்து பல மாதங்களாக பல வீரர்கள் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் உள்ளனர்.

இது ‘மனதளவில் கடனமாக உள்ளது என கேப்டன் கோஹ்லி தெரிவித்தார்.
இது குறித்து கங்குலி கூறிகையில் அன்னிய வீரர்களை விட நமது இந்திய அணியினர் அதிக சகிப்புத் தன்மை கொண்டவர்கள். கடந்த ஆறு, ஏழு மாதங்களாக கொரோனா பாதுகாப்பு வளையத்தில் பல்வேறு கிரக்கெட் தொடர்கள் நடந்தன. இது மிகவும் கடினம்.

ஓட்டலில் இருந்து மைதானம் சென்று போட்டி நெருக்கடியை சமாளிக்க வேண்டும், மீண்டும் ஓட்டலுக்கு திரும்ப வேண்டும். இந்த வாழ்க்கை முற்றிலும் வித்தியாகமானது. விளையாட்டு, தொழில் என எதுவாக இருந்தாலும் சரி, வாழ்க்கையில் எந்த உத்தரவாதமும் இல்லை, ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும் என்றார்.