இந்திய அணிக்கு 420 ரன்கள் வெற்றி இலக்கு

இங்கிலாந்து 2-வது இன்னிங்ஸ் பேட்டிங்கைத் தொடங்கியது. அஸ்வின் வீசிய முதல் பந்திலேயே ரோரி பர்ன்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 40 ரன்கள் சேர்த்தார். அந்த அணி 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் சார்பில் பந்து வீச்சில் அசத்திய அஸ்வின் 6 விக்கெட்டுகளும், நதீம் 2 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா மற்றும் ஜாஸ்பிரீத் பும்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன்மூலம், இந்திய அணியின் வெற்றிபெற 420 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். தற்போது சுப்மன் கில்லுடன், புஜாரா ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார்.