சேசிங்கில் அதிக ரன்கள் சாதனை படைத்தா பகர் சமான்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற 342 ரன்கள் இமாலய இலக்கை பாகிஸ்தான் துரத்தியது. அபாரமாக ஆடிய பகர் சமான் கடைசி ஓவரில் கவனக்குறைவால் தனது விக்கெட்டை ரன் அவுட் மூலம் தாரைவார்த்தார். இதனால், பாகிஸ்தான் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில், ரன் இலக்கை துரத்தும்போது அதிக ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற புதிய உலக சாதனையை பகர் சமான் படைத்துள்ளார்.

தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். அவர் 155 பந்துகளில் 193 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் 185 (நாட் அவுட்), ரன்கள் எடுத்து சாதனை பட்டியலில் இடம் பிடித்து இருந்தார்.