மறைந்த நடிகருக்கு மிஸ் யூ என்று கூறி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகை..

கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வந்தவர் சிரஞ்சீவி சர்ஜா ஆவார். நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவும் மேக்னா ராஜும் 10 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நடிகை மேக்னா ராஜ் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். ஆனால் நடிகர் சிரஞ்சீவி சர்ஜா கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திடீரென்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இது அவரது குடும்பத்தினர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் மேக்னா ராஜ் அவர்களுக்கு கடந்த ஞாயிறு அன்று பிரம்மாண்டமான முறையில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றிருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் பிறந்தநாள் ஆகும். இதனையடுத்து பிரபல நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் மறைந்த நடிகர் சிரஞ்சீவி சத்யாவுக்கு மனமுருகி பிறந்தநாள் வாழ்த்துக்களை தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருக்கிறார். தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.