கனவு நிறைவேறியது – ஷாநவாஸ் தஹானி

இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் அணி வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு பிறகு பாகிஸ்தான் அணி வீரர்களான சோயிப் மாலிக், பாபர் அசாம் மற்றும் சிலருடன் இந்திய ஆலோசகர் டோனி கலந்துரையாடினார். இதன் பின்னர் பாகிஸ்தானின் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஷாநவாஸ் தஹானியுடன் டோனி புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதனை டுவிட்டரில் பகிர்ந்த ஷாநவாஸ் தஹானி, தனது மரியாதைக்குரிய வீரர்களுள் ஒருவரான டோனியை சந்திக்கும் தன்னுடைய கனவு நிறைவேறி விட்டதாகவும், பாகிஸ்தானின் வெற்றி மற்றும் டோனியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட இந்த நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.