கண் தானம் செய்கிறார் தமிழக முதல்வர்

தேசிய கண் தான தினத்தையொட்டி, கண் தானம் செய்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். கண் தானத்தை ஊக்குவிக்கும் வகையில், முதலமைச்சர் கண் தானம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கண் தானத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில், அதற்கான ஒப்புதல் படிவத்தில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கையெழுத்திட்டார்.

இந்நிலையில், தமிழகத்தில் கண் தானம் செய்ய விரும்புவோருக்காக, புதிய இணையதளத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

www.hmis.tn.gov.in/eye-donor/ என்ற தளத்தில் கண் தானம் செய்ய விரும்புவோர் பதிவு செய்யலாம்.

கண் தானம் செய்ய இணையதளத்தில், தங்களது விவரத்தைப் பதிவு செய்து ஆன்லைனில் சான்றிதழ் பெறலாம்.

புதிய தொழிற்கொள்கை வெளியீடு :

மேலும், கொரோனா பொதுமுடக்கத்தால் இடம்பெயரும் தொழில் நிறுவனங்களை ஈர்க்க, புதிய தொழிற்கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் மின்னணு துறையில் புதிய தொழிற்கொள்கையை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.

முதலீடுகளை ஈர்க்க மின்னணு நிறுவனங்களுக்கு சலுகை வழங்கும் வகையில், தொழிற்கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.