ஆஸ்திரேலிய அணிக்கு 40 சதவீதம் அபராதம்

ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் (பாக்சிங் டே டெஸ்ட்) நடைபெற்றது. இன்றைய 4-வது நாள் ஆட்டத்தில் இந்தியா 70 ரன்கள் இலக்கை 2 விக்கெட் இழப்பிற்கு எட்டி இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் இந்திய அணி தொடரை 1-1 என சமநிலைப்படுத்தியுள்ளது. 3-வது டெஸ்ட் சிட்னியில் 7-ந்தேதி நடைபெற இருக்கிறது.

மெல்போர்ன் டெஸ்டில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. இதனால் ஐசிசி 40 சதவீதம் அபராதம் விதித்ததுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான புள்ளிகளில் இருந்து நான்கை குறைத்துள்ளது.