அது தான் என்னோட பலம் – தோனி

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணியும் ராஜஸ்தான் அணியும் மோதிக்கொண்டன. இந்தப் போட்டி சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு மிகவும் ஸ்பெஷலான போட்டி. நேற்று அவர் சிஎஸ்கே கேப்டனாக 200ஆவது போட்டியில் விளையாடினார்.

ஐபிஎல் ஆரம்பித்ததிலிருந்து சிஎஸ்கே அணிக்காக கேப்டனாகச் செயல்பட்டு வருகிறார். இதுவரை சிஎஸ்கேவுக்காக 201 போட்டிகளில் ஆடியிருக்கிறார். இதில் சாம்பியன்ஸ் லீக்கின் 24 போட்டிகளும் அடக்கம். ஒரேயொரு போட்டி தவிர்த்து மற்ற அனைத்துப் போட்டிகளிலும் சிஎஸ்கே கேப்டனாக இருந்துள்ளார். இதனால் தோனியின் ஆட்டத்தை ரசிக்க ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் தோனியின் ஆட்டம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.

மிடில் ஓவர்களில் மொயின் அலி, ஜடேஜாவின் சுழல் மேஜிக்கால் 45 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றிபெற்றது. இருப்பினும், கடந்த இரு போட்டிகளாக தோனியின் ஃபார்ம் குறித்து கேள்விகள் எழுந்தன. நேற்றைய போட்டியில் முதல் ஆறு பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் திணறியதால் பலத்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவரின் டாட் பந்துகளால் அணியின் ரன்ரேட் வெகுவாகக் குறைந்தது.