டெஸ்ட் போட்டி : இந்தியாவுக்கு 420 ரன்கள் வெற்றி இலக்கு

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 578 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா, அஷ்வின் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 337 ரன்னில் சுருண்டது. ரிஷப் பண்ட் 91 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழக்காமல் 85 ரன்களும், புஜாரா 73 ரன்களும் அடித்தனர்.

241 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. இந்தியாவின் அஷ்வின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது. 2-வது இன்னிங்சில் முதல் பந்திலேயே ரோரி பேர்ன்ஸை வீழ்த்தி அசத்தினார்.

ஜோ ரூட் அதிகபட்சமாக 40 ரன்கள் அடித்தார். ஒல்லி போப் 28 ரன்களும், ஜோஸ் பட்லர் 24 ரன்களும், டாம் பெஸ் 25 ரன்களும் சேர்க்க இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 178 ரன்னில் ஆல்அவுட் ஆனது. அஷ்வின் அபாரமாக பந்து வீசி 6 விக்கெட் வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் 241 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் ஓட்டுமொத்தமாக 419 ரன்கள் அதிகம் பெற்றிருந்தது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 420 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.