இந்தியாவின் 75-வது கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை எட்டினார் தமிழக வீரர் பிரணவ்…!

தமிழகத்தை சேர்ந்த இளம் செஸ் வீரர் வி.பிரணவ். ருமேனியாவில் நடந்த சர்வதேச செஸ் போட்டியில் வெற்றி பெற்றதும் மூலம் கிராண்ட்மாஸ்டருக்குரிய 3-வது தரநிலையை வெற்றிகரமாக அடைந்துள்ளார். இதையடுத்து அவர் இந்தியாவின் 75-வது கிராண்ட்மாஸ்டராகி இருக்கிறார். தமிழ்நாட்டில் இருந்து கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை எட்டிய 27-வது வீரர் ஆவார். 15 வயதான பிரணவ் சென்னையில் வேலம்மாள் பள்ளியில் படித்து வருகிறார்.