தமிழக வீரர் நடராஜன் மிரட்டல்.. பணிந்தது ஆஸ்திரேலியா..

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி அடுத்ததாக 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது.

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, இந்திய அணி பேட்டிங் செய்தது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசிக் கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஜடேஜா 23 பந்துகளில் 44 ரன்கள் அடித்தார்.

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 161- ரன்கள் எடுத்தது. இதன்மூலம், 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில், 7 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை மட்டுமே எடுத்தது. 

இதையடுத்து 11 ரன் வித்தியாசத்தில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில், தமிழக வீரர் யார்க்கர் கிங் நடராஜன் 3 விக்கெட் எடுத்து அனைவரையும் அசத்தினார்.