உலக ஸ்னூக்கர் போட்டியில் வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை அனுபமாவுக்கு உற்சாக வரவேற்பு

உலக ஜூனியர் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டி ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் நடந்தது. இதில் பெண்களுக்கான 21 வயதுக்கு உட்பட்ட பிரிவின் இறுதிப்போட்டியில் தமிழக வீராங்கனை அனுபமா 1-4 என்ற பிரேம் கணக்கில் தாய்லாந்தின் பஞ்சயா சன்னோயிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தார். அனுபமா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சலீம் ஸ்னூக்கர் அகாடமியில் பயிற்சி பெற்றவர் ஆவார். வெள்ளிப்பதக்கம் வென்ற அனுபமா விமானம் மூலம் நேற்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.