காமன்வெல்த் போட்டியில் டி20 மகளிர் கிரிக்கெட்

இங்கிலாந்தின் பா்மிங்ஹாமில் 2022ல் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியில் டி20 மகளிர் கிரிக்கெட் இடம் பெறுகின்றன. ஜூலை, ஆகஸ்ட் மாதம் பா்மிங்ஹாமில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பார்படோஸ் ஒரு பிரிவிலும், இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் அறிவிக்கப்படாத அணி உள்ளிட்டவை மற்றொரு பிரிவிலும் இடம் பெறுகின்றன.