30 வருஷத்திற்கு முன்னாடி, எப்படி போனானோ அப்படியே திரும்பி வந்திட்டேன்னு சொல்லு : சிரஞ்சீவி

ஊரடங்கால் பல பிரபலங்கள் வீட்டிலேயே தங்களது குடும்பத்தினருடன் செலவழிக்கும் நேரங்களை புகைப்படம் எடுத்து ரசிகர்களுக்காக, சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிடுகின்றனர்.

இந்நிலையில், தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவி தனது மனைவியுடன்,   1990-ல் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அப்படியே, அதேபோன்று.. தற்போது,     2020 -ல் அதை ரிகிரியேட் செய்துள்ளார்.

ரிகிரியேட் செய்த புகைப்படம்

30 வருடங்களுக்கு முன்பு, பிசியாக இருக்கும் நேரத்தில், தனது மனைவியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தில், நீலச் சட்டை மற்றும் மனைவி சிவப்புப் புடவை அணிந்து எதார்த்தமாக எடுக்கப்பட்ட அந்த புகைப்படம்.

தற்போது, அதே நிற உடையில் அதே போஸில், மீண்டும் இந்த புகைப்படத்தை ரிகிரியேட் செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள்  இந்த ஜோடியை வாழ்த்தி உள்ளனர்.

சிரஞ்சீவிக்கு சவால் :

இந்த சவாலை ஏற்ற ராஜமவுலியும், வீட்டு வேலைகள் செய்த வீடியோவை வெளியிட்டு தெலுங்கு நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு, சவால் விடுத்தார். அவர்களும் வீட்டை சுத்தம்செய்து, வீடியோக்கள் வெளியிட்டனர்.

 

இதனைத் தொடர்ந்து, ஜூனியர் என்.டி.ஆர், நடிகர் சிரஞ்சீவிக்கு சவால் விடுக்க, சவாலை ஏற்ற சிரஞ்சீவி, அதை ரஜினிக்கு அப்படியே திருப்பி கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது எப்டி இருக்கு..!