சஞ்சிதா சானு அர்ஜுனா விருது பெறுவது உறுதி!

ஊக்கமருந்து எடுத்துக்கொண்டதாக குற்றச்சாட்டப்பட்ட பளுதூக்கும் வீராங்கனை சஞ்சிதா சானு சர்வதேச கூட்டமைப்பின் அனைத்து வழக்குளிலிருந்தும் விடுபட்டுள்ளார். எனவே டில்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நாங்கள் கட்டுப்பட்டு அவரை அர்ஜுனா விருதுக்கு பரிசீலிக்கிறோம் என்று பி.டி.ஐ அமைச்சகம் கூறியுள்ளது.

26 வயதான இவர், 2014 மற்றும் 2018 காமன்வெல்த் போட்டிகளில் 48 கிலோ மற்றும் 53 கிலோ பிரிவுகளில் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். அவர் 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் அங்கீகாரம் அர்ஜுனா விருதைப் பெற விண்ணப்பித்திருந்தார். ஆனால் இரண்டு சந்தர்ப்பங்களிலும் புறக்கணிக்கப்பட்டார். ஊக்கமருந்து மீறலை சஞ்சிதா சானு செய்யவில்லை என்று உலக உடலின் சட்ட ஆலோசகர் லில்லா சாகி கையெழுத்திட்டு, ஐ.டபிள்யூ.எஃப்-ற்கு ஒரு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.

இறுதியாக, 2014 முதல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அர்ஜுனா விருதை தற்போது பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளார் சஞ்சிதா சானு.