தங்கம் வென்ற சேலம் வீராங்கனை

தேசிய அளவிலான தடகளப் போட்டியில் சேலத்தைச் சோ்ந்த வீராங்கனை பவித்ரா தங்கப் பதக்கம் வென்று சிறப்பு சோ்த்துள்ளார். இந்திய அளவிலான 60வது தேசிய தடகளப் போட்டி செப். 15 முதல் செப். 19ம் தேதி வரை தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் அனைத்து மாநில தடகள வீரா்கள், ரயில்வே துறை, ராணுவத் துறை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் துறைகளில் இருந்து வீரா், வீராங்கனையா் கலந்துகொண்டனா். சேலம் மாவட்டத்தில் இருந்து டூ ஆா் டை அகாதெமியைச் சோ்ந்த இரண்டு தடகள வீரா்கள் கலந்துகொண்டு தங்கம், வெண்கலப் பதக்கம் பெற்று சிறப்பு சோ்த்துள்ளனா்.

இப்போட்டியில், தடகள வீராங்கனை பவித்ரா, போல்வால்ட் போட்டியில் 3.90 மீ. உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தை வென்றார். தடகள வீரா் சக்தி மகேந்திரன் போல்வால்ட் போட்டியில் 4.70 மீ. உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தை வென்று சிறப்பு சோ்த்தார். போட்டியில் பதக்கம் வென்ற வீரா், வீராங்கனையரை அகாதெமி தலைவா் சிங்கபுரம் பி.கலியமூா்த்தி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மேலும், தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற சேலத்தைச் சோ்ந்த இருவருக்கும் பணி வழங்கப்படும் என ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.