சச்சினா, கோலியா.? : அக்தரின் தீர்வு

இந்திய கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் சச்சின் தெண்டுல்கர். 1989 முதல் 2013 வரை சுமார் 24 வருடம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, 34 ஆயிரம் ரன்களுக்கு மேல் விளாசியுள்ளார்.

200 டெஸ்ட் போட்டிகளில், 15,921 ரன்களும், 463 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில், 18,426 ரன்களும், ஒரேயொரு டி20 போட்டியில் 10 ரன்களும் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 100 சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

தற்போதைய காலக்கட்டத்தில், விளையாடி வரும் விராட் கோலி, சச்சின் தெண்டுல்கரின் ஏறக்குறைய சாதனைகளை முறியடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள், இருவரையும் ஒப்பிட்டு வருகிறார்கள்.

ஆனால், தற்போதைய காலக்கட்டத்தில் சச்சின் தெண்டுல்கர் விளையாடியிருந்தால், ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்திருப்பார் என்று சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

சச்சின் தெண்டுல்கர், சோயிப் அக்தர்இதுகுறித்து, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கூறுகையில் ‘‘சச்சின் தெண்டுல்கர் மிகவும் கடினமான கால கிரிக்கெட்டில் பேட்டிங் செய்தார்.

தற்போது, அவருக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால், இன்னும் 1.30 லட்சம் ரன்கள் அதிகமாக அடித்திருப்பார். ஆகவே சச்சின் தெண்டுல்கர் – விராட் கோலி ஒப்பீடு சரியாக இருக்காது’’ என்றார்.

ரன்-மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி, சர்வதேச அளவில் 21,901 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.