சச்சின், கங்குலி, கோலி, பி.வி.சிந்து, ஹிமா இவர்களுடன் பிரதமர்..!

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  ஆனால், ஊரடங்கை மீறி பல இடங்களில், மக்கள் வெளியே சுற்றி வருவதைக் காண முடிகிறது.

ஊரடங்கை மீறி அநாவசியமாக சுற்றித்திரிந்தால், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என, மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த ஆலோசனையில், சச்சின் டெண்டுல்கர், கங்குலி, விராட் கோலி பி.வி. சிந்து, ஹிமா தாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

ஊரடங்கை மக்கள் கடைபிடிப்பதன் முக்கியத்துவம் பற்றி, விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக, பிரதமர் மோடி, விளையாட்டு வீரர்களுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியிடம், இது பற்றிக் கேட்டபோது, பிரதமர் மோடியுடனான காணொலிக் காட்சி ஆலோசனையில், தான் பங்கேற்றதாக தெரிவித்தார். ஆனால், இந்த ஆலோசனையில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து கருத்துக் கூற மறுப்பு தெரிவித்துவிட்டார்.