சச்சின் மருத்துவமனையில் அனுமதி

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 6 நாள்களுக்குப் பின்னா், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சச்சின் டெண்டுல்கா் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கடந்த மார்ச் 27ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மும்பையில் உள்ள வீட்டிலேயே அவா் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில், அவா் வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் ‘உங்களது வேண்டுதல்களுக்கும் விருப்பங்களுக்கும் நன்றி. மருத்துவ ஆலோசனையின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். சில தினங்களில் வீடு திரும்புவேன் என நம்புகிறேன். அனைவரும் பாதுகாப்புடன் இருங்கள்’ என சச்சின் தெரிவித்துள்ளார்.