ஓடிடி-யில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூரரைப் போற்று.!’

சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சூரரைப் போற்று’ படத்தை, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. ’இறுதிச்சுற்று’ பட  பெண் இயக்குனரான சுதா கொங்கரா  இயக்கியுள்ளார்.

இப்படம், திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓடிடி தளமான அமேசான் பிரைமில், அக்டோபர் 30-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இப்படம் ரிலீஸுக்கு முன்னரே ரூபாய் 100 கோடி வியாபாரம் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது சூர்யா ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், சூர்யா ரசிகர்கள் ட்விட்டரில் #SooraraiPottruHits100crPB என்ற ஹாஸ்டேக்கை டிரெண்டாக்கி வருகிறார்கள்.

’சூரரைப் போற்று’ திரைப்படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

நிதியுதவி :

முன்னதாக, ‘சூரரைப்போற்று’ திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து தேவையுள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்க உள்ளதாக சூர்யா அறிவித்திருந்தார்.

 அதாவது, பொதுமக்களுக்கும் திரையுலகை சார்ந்தவர்களுக்கும், தன்னலம் பாராமல் முன்னின்று பணியாற்றிய கொரோனா முன்களப் பணியாளர்களுக்கும் 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும்’ என்ற தனது அறிவிப்பின்படி, அதை செயல்படுத்தவும் தொடங்கியிருக்கிறார்.

முதல்கட்டமாக 1.5 கோடி ரூபாய் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.