8 இந்திய ஹாக்கி வீரர்களுக்கு ரூ.1 கோடி பரிசு

டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியைச் சேர்ந்த பஞ்சாப் மாநில வீரர்கள் 8 பேருக்கு தலா ரூ.1 கோடி பரிசளிப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆடவர் ஹாக்கியில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி இந்தியா&ஜெர்மனி அணிகள் இடையே நடைபெற்றது. அதில் இந்தியா 5-&4 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. சுமார் 41 ஆண்டுகள் கழித்து இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது. இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது..

இந்நிலையில் இந்திய ஹாக்கி அணியில் விளையாடிய 8 பஞ்சாப் மாநில வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்தது. இதனையடுத்து இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்ப்ரீத் சிங் உள்பட 7 பேரை கவுரவிக்கும்விதமாக இந்தப் பரிசுத் தொகை வழங்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.