தோல்விக்கான காரணம் இது தான் – ரோகித் சர்மா

நேற்று நடைபெற்ற 13வது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 137 ரன்கள் குவித்துள்ளனர். தொடக்க வீரராக களமிறங்கிய குயின்டன் டீ காக் 4 பந்துகளை எதிர்கொண்டு 1 ரன் அடித்து ரிஷப் பண்டிடம் கேட்ச் கொடுத்து விக்கெட் இழந்தார்.
இதன்பிறகு ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் பார்ட்னர்ஷிப்பில் 58 ரன்கள் குவிக்க ஆவேஷ் கானிடம் சூரியகுமார் யாதவ் விக்கெட் இழந்தார். இதன்பிறகு ரோகித் சர்மாவும் 44 ரன்கள் குவித்து அமித் மிஸ்ராவிடம் விக்கெட் இழந்தார். இதன்பிறகு களமிறங்கிய ஹர்திக் பாண்டிய (0), குர்னால் பாண்டியா (1), பொல்லார்டு (2) அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர்.

இதன்பிறகு ஜோடி சேர்ந்த இஷான் 26 ரன்களும், ஜெயன்ட் யாதவ் 23 ரன்களும் குவித்து விக்கெட் இழந்தனர். இதில் டெல்லி பவுலர் அமித் மிஸ்ரா 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். ஆவேஷ் கான் 2, லலித் யாதவ், ரபாடா, ஸ்டோயின்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்துள்ளார்கள். தற்போது 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி களமிறங்கியுள்ளது.

இதன்பிறகு களமிறங்கிய டெல்லி அணி ஆரம்ப முதல் விக்கெட்களை இழக்காமல் நிதானமாக விளையாடி வந்தது. தொடக்க வீரராக களமிறங்கிய பிரித்வி ஷா 5 பந்தில் ஜெயன்ட் யாதவ் பந்துவீச்சில் விக்கெட் இழந்தார். இதன்பிறகு ஷிகர் தவான் மற்றும் ஸ்மித் 50 ரன்கள் பார்ட்னர்சிப் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இதில் ஸ்மித் 33 ரன்களும், தவான் 45 ரன்களுடன் வெளியேறினர்.

இதன்பிறகு களமிறங்கிய பண்ட் 7, லலித் யாதவ் 22, ஹெட்மேயர் 14 ரன்கள் அடித்ததன் மூலம் 138 ரங்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சிறப்பான பவுலிங் மற்றும் பேட்டிங்கை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த போட்டி முடிவடைந்த பிறகு மும்பை கேப்டன் ரோகித் சர்மா தோல்விக்கான காரணத்தை கூறியுள்ளார். அப்போது அவர் பேசுகையில் ‘தொடக்கத்திற்குப் பிறகு நாங்கள் நடுத்தர ஓவர்களில் சிறப்பாக பேட் செய்திருக்க வேண்டும். அது மீண்டும் மீண்டும் நடக்கிறது. எங்கள் தொடக்கத்தை எங்களால் பயன்படுத்த முடியவில்லை, மேலும் பேட்டிங் யூனிட்டை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் நீங்கள் டெல்லி பந்து வீச்சாளர்களை பாராட்டியே ஆக வேண்டும், அவர்கள் எங்களை இறுக்கமாக வைத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர். பனி வரும் என்று எங்களுக்குத் தெரியும், ஆனால் கடந்த சில ஆட்டங்களில் பந்தைப் பிடிப்பது அவ்வளவு கடினம் அல்ல என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். பனி ஒரு காரணமில்லை. இன்று போல் விளையாடாமல் ஸ்மார்ட் கிரிக்கெட்டை விளையாட வேண்டும். எனக்கு சிறிய காயம் ஏற்பட்டது. ஆனால் தற்போது அது நன்றாக இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார் ரோகித் சர்மா.