ரியல் மாட்ரிட் அணி 10-வது வெற்றி.

20 அணிகள் இடையிலான லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு மாட்ரிட் நகரில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் அணி, கிரானடாவை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி ஆதிக்கம் செலுத்தினாலும் முதல் பாதியில் எதிரணியின் தடுப்பு அரணை தகர்த்து கோல் அடிக்க முடியவில்லை. 57-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணி முதல் கோல் அடித்தது. அந்த அணி வீரர் கேஸ்மிரோ இந்த கோலை அடித்தார். கடைசி நிமிடத்தில் அந்த அணியின் கரிம் பென்ஜிமா 2-வது கோலை அடித்தார். முடிவில் ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் கிரானடாவை வீழ்த்தியது. 15-வது ஆட்டத்தில் ஆடிய ரியல் மாட்ரிட் அணி பெற்ற 10-வது வெற்றி இதுவாகும். அட்லெடிகோ மாட்ரிட், ரியல் மாட்ரிட் அணிகள் தலா 32 புள்ளிகள் பெற்றுள்ளன. கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் அட்லெடிகோ மாட்ரிட் அணி முதலிடத்தில் நீடிக்கிறது.