அனுஷ்காவுடன் சேர்ந்து நடிக்க தயார் – விராட் கோலி

‘என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தில் எனது கதாபாத்திரத்தில் நடிக்க நான் தயார்’ என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி, ‘என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தில் எனது கதாபாத்திரத்தில் நடிக்க நான் தயார். ஆனால் அந்த படத்தில் அனுஷ்கா சர்மாவும் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும். அப்படி நடித்தால் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஒவ்வொருவர் வாழ்விலும் அதனை வெளிக்கொண்டு வரும் நபர் ஒருவர் இருப்பார். என்னை பொறுத்தமட்டில் அது அனுஷ்கா தான். அவரை பார்த்த உடனேயே அதனை புரிந்து கொண்டேன். இந்த வாழ்க்கை எனக்காக மட்டும் வாழ வேண்டியது அல்ல. மற்றவர்களுக்காவும் வாழ வேண்டும் என்பதை உணர வைத்தார். அனுஷ்காவை சந்திக்கும் முன்பு நான் சுயநலமாக இருந்தேன். மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது தான் முழுமையடைய முடியும் என்பதை அவர் உணர்த்தினார்’ என்றார்.