12 கிலோ மீட்டர் தூரம் படப்பிடிப்புக்கு சைக்கிளில் சென்ற ரகுல் பிரீத் சிங்

தொடர்ந்து தேவ், என்.ஜி.கே படங்களில் நடித்தார். தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக அயலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். சமீபத்தில் கொரோனா தொற்றில் சிக்கி சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். தற்போது மே டே என்ற இந்தி படத்தில் அஜய்தேவ்கான் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். இதன் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் பங்கேற்க ரகுல் பிரீத் சிங் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருக்கிறார். இந்த நிலையில் ஓட்டலில் இருந்து படப்பிடிப்பு தளத்துக்கு ரகுல் பிரீத் சிங் 12 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சென்றுள்ளார். சைக்கிளில் செல்லும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து சைக்கிள் பயணம் எனக்கு புதிய அனுபவமாக இருந்தது என்று கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகிறது.