7 நாள் கொரன்டைனை முடித்த பொல்லார்டு

ஐபிஎல் 2021 சீசன் நாளைமறுதினம் சென்னையில் தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் ஆர்சிபியை எதிர்கொள்கிறது. அந்த அணி சமூக வலைத்தளங்களில் சில படங்களை வெளியிட்டது. அந்தப் படங்களில் பொல்லார்டு இடம் பெறவில்லை. இந்த நிலையில் பொல்லார்டு 7 நாட்கள் கொரண்டைனில் இருந்துள்ளார். அவரது கோரன்டைன் நாட்கள் முடிவடைந்த நிலையில் அணியுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்ள இருக்கிறார்.

ஆர்சிபி அணியின் தொடக்க பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் குணமடைந்துவிட்டார். இதனால் அணியில் இணைய உள்ளார். என்றாலும், முதல் ஒன்றிரண்டு போட்டிகளில் தேவ்தத் படிக்கல் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.