ஒரே நேரத்தில் கர்ப்பம் தரிக்க விருப்பம் : இரட்டை சகோதரிகள்

உலகின் மிக அதிக ஒற்றுமைகள் மிக்க இரட்டையர்களாக அறியப்படுபவர்கள் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் அன்னா மற்றும் லூசி. பெர்த் மாகாணத்தை சேர்ந்த அன்னா மற்றும் லூசி இருவருமே, உருவத்தில் ஒரே போல இருப்பார்கள்.

யாருக்கு மச்சம்? :

அன்னாவுக்கு கன்னத்தில் சிறு மச்சம் உள்ளது. அதை வைத்துதான் பெரும்பாலானோருக்கு, நாம் யாருடன் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதே தெரியுமாம்.

இருவருமே தாங்கள் வாழ்நாள் முழுவதும், இணை பிரியாமல் இருக்க, ஒருவரையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று லட்சியத்துடன் வாழ்ந்து வந்தனர்.(நல்ல லட்சியம்?)

பென் பைர்ன்  (31) என்பவர் இருவரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார். இரு தரப்புக்கும் பிடித்திருந்ததால், சமீபத்தில் சகோதரிகள் இருவரையும் திருமணம் செய்துகொண்டார். (மச்சக்காரர்?)

ஐ.வி.எப் எனும் முறை :

தற்போது, இரட்டை சகோதரிகள் ஒரே நேரத்தில், தங்களது காதலர் மூலம் கர்ப்பம் தரிக்க விரும்பியுள்ளனர்.

ஒன்றாக சாப்பிடுவது, ஒன்றாக தூங்குவது, ஒரே நேரத்தில் ஒன்றாக மற்ற அனைத்து வேலைகளும் செய்வது என்று இந்த இரட்டையர்கள் பிரிவதே இல்லை.

இந்த நிலையில், இருவருமே தங்களது காதலரான பென் பைர்ன் மூலம், கர்ப்பம் தரிக்க விரும்பியுள்ளனர். அதுவும், ஒரே நேரத்தில் இருவரும் கர்ப்பம் தரிக்க வேண்டும் என்று விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

உடலுறவு மூலம், இருவரும் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரிக்க வாய்ப்பு மிக மிக குறைவு என்பதால், ஐ.வி.எப் எனும் முறையை இருவரும் முன்வைக்கின்றனர்.

அதாவது, பென் பைர்ன்-ன் விந்தணுக்களை, இரட்டையர்கள் இருவரின் கரு முட்டைகளில் ஒரே நேரத்தில் செயற்கை முறையில் செலுத்தும்போது, இருவரும் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரிக்க வாய்ப்பு உள்ளதால், இம்முறையை அவர்கள் தேர்வு செய்துள்ளனர்.

தற்போது, பென் உடன் வசித்து வரும் இரட்டையர்கள், “பிறப்பு முதல் இறப்பு வரை எல்லாமே எங்களுக்கு ஒன்றாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம்” என்று கூறியுள்ளனர்.

இதெல்லாம் வேற லெவல்.!