ஓபன் டென்னிஸ்: மெட்விடேவ், சிட்சிபாஸ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் 6-4, 6-1, 6-2 என்ற நேர்செட்டில் 57-ம் நிலை வீரரான ஜெர்மனியின் டோனிமிக் கோப்பெரை தோற்கடித்து தொடர்ந்து 4-வது முறையாக 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

இதேபோல் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-3, 6-4, 6-7 (4-7), 6-0 என்ற செட் கணக்கில் 44-ம் நிலை வீரரான அட்ரியன் மன்னரினோவை (பிரான்ஸ்) வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.