மும்பை அணிக்கு மேலும் ஒரு பலத்த அடி ! ஹர்திக் பாண்டியா குறித்த செய்தியை வெளியிட்ட ஜாஹீர் கான்

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 14வது சீசன் ஏப்ரல் 9 முதல் கோலாகளமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 4 லீக் போட்டிகள் முடிவடைந்து இருக்கிறது. இதில் ஆர்சிபி, டெல்லி, கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் தங்களது முதல் போட்டியிலயே வெற்றி பெற்று இருக்கின்றனர். தற்போது புள்ளி பட்டியலில் சிஎஸ்கேவை வீழ்த்திய டெல்லி அணி தான் முதலிடத்தில் இருக்கிறது.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு இடையே நடைபெற்ற முதல் போட்டியில் ஆர்சிபி அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணியின் தோல்விக்கு அவர்களின் பந்துவீச்சு காரணம் என்று கூறினர். மும்பை பவுலர்கள் ராகுல் சஹார் 4 ஓவர்கள் வீசி 43 ரன்களும், போல்ட் 4 ஓவர்கள் வீசி 36 ரன்களும் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த போட்டியில் மும்பை 5 பவுலர்களை மட்டுமே பயன்படுத்தி இருக்கினறனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவுக்கு பவுலிங் வாய்ப்பு கொடுக்கவில்லை. ஒருவேளை இவர் பவுலிங் வீசியிருந்தால் கண்டிப்பாக ஒரு விக்கெட் எடுத்திருப்பார். ஆனால் மும்பையின் முடிவு ரசிகர்களை ஏமாற்றியது.

இதுக்கு ஆர்சிபி கூறிய காரணம் என்வென்றால் ஹர்திக் பாண்டியா இன்னும் முழுமையாக பந்துவீசுக்கு தயாராகவில்லை. இவருக்கு முதுகு மற்றும் தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயம் குணமாகவில்லை என்று கூறியுள்ளனர். இதனால் ரசிகர்கள் ஹர்திக் பாண்டியா எப்போது தான் பந்துவீசுவார் என்று கேள்வி கேட்டு வருகிறார்.

இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் செய்லபாடு இயக்குநரான ஜாகிர் கான் பேசுகையில் ‘ ஹர்திக் பாண்டியாவுக்கு ஏற்பட்டுள்ள முதுகு மற்றும் தோள்பட்டை காயம் அவர் பந்துவீசுவதற்கு முழு ஒத்துழைப்பு தராது என்பதால் தான் அவர் முதல் போட்டியில் பந்துவீசவில்லை. ஆனால் இனிவரும் போட்டிகளில் அவர் பந்துவீசுவார். பிசியோ தரப்பில் இருந்து முழு உத்திரவாதம் தந்தவுடன் பாண்டியா பந்துவீசுவார். அவர் இல்லையென்றாலும் 6வது பவுலராக பொல்லார்டு இருக்கிறார்’ என்று கூறியுள்ளார் ஜாகிர் கான்.